கிணற்றுக்குள் விழுந்த பெண் சடலமாக மீட்பு!

75

வெள்ளவத்தை-அலுவலவத்த பிரதேசத்தில் கிணறொன்றுக்குள் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பெண்ணொருவர் கிணறொன்றில் வீழ்ந்து இருப்பதாக பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தொலைபேசி ஊடாக அறியத்தந்ததாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த பெண் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 81 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.