உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முற்றாக கைவிட்ட பூசா சிறைச்சாலையின் கைதிகள்…!!!

86

பூசா சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இறுதி 14 கைதிகளும் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

கஞ்சிபானை இம்ரான் உள்ளிட்ட 45 கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்திருந்தனர்.

தொலைபேசி வசதிகள், அவர்களை பார்வையிட வரும் சட்டத்தரணிகளுடன் உரையாடும் நேர நீடிப்பு மற்றும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றம் சென்று மீள சிறைச்சாலைக்கு திரும்பும் போது முன்னெடுக்கப்படும் பரிசோதனைகள் நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

எவ்வாறாயினும், இறுதியாக 14 கைதிகள் மாத்திரம் இன்று காலை வரையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்திருந்தனர்.

இந்தநிலையில் அவர்களது போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.