தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர் ஹஷிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வீரர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளாக விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹஷிம் ஆம்லா திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின் ஆகியோருடன் இணைந்து ஆம்லா சிறப்பாக பங்காற்றினார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக ஓட்டங்களை குவித்த வீரர் உட்பட பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்நிலையில், அவரது சாதனைகளை பாராட்டி வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரரான ஷான் பொல்லாக் கூறுகையில், ‘அருமையான சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு வாழ்த்துக்கள் ஹஷிம் ஆம்லா. 90-களின் இறுதியில் கிங்க்ஸ்மெட் வலையில் உங்களை முதல் முறை பார்த்ததில் இருந்து, இது என்ன அற்புதமான பயணம்!’ என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறுகையில், ‘முதன் முறையாக ஹஷிம் ஆம்லாவுக்கு எதிராக, நியூசிலாந்தில் நடந்த U19 உலகக்கோப்பையில் ஆடினோம். அப்போதே எங்களுக்கு எதிராக சிறந்த இன்னிங்க்ஸ் ஆடி தன் அருமையான ஆட்டத்தின் ஒரு துளியை காட்டினார்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here