உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளனர்.

குறித்த பேச்சுவார்த்தை, இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இதுவரைக்காலமும் நடைபெற்ற சாட்சி விசாரணைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும் தாக்குதல் குறித்த இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான குழு உறுப்பினர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

தற்போதைய நிலையில், குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக ஆனந்த குமாரசிறி தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.0Shares

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here