bigg boss நிகழ்ச்சியானது தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியானது, தெலுங்கில் இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பட்டு வரும் நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே பல சர்ச்சைகள் எழுந்து வந்தன.

இந்நிலையில், பிக்பாஸ் தெலுங்கு மூன்றாவது சீசனை தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், நாகார்ஜுனா தன்னுடைய 60வது பிறந்தநாளை ஒட்டி தன் குடும்பத்தினருடன் பிறந்தநாளை கோலாகலமாக ஸ்பெயின் நாட்டில் கொண்டாடி வருகிறார்.

இதனால், வார இறுதியில் தொகுத்து வழங்க வேண்டிய bigg boss நிகழ்ச்சியில் பங்கேற்க தவறிவிட்டுள்ளார் நடிகர் நாகர்ஜுனா.

தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை நடிகை ரம்யாகிருஷ்ணன் ஏற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதி செய்யும் வகையில் இன்றைய தெலுங்கு bigg boss புரோமோவில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா கிருஷ்ணனின் வரவு, தெலுங்கு bigg boss பார்க்கும் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here