இலங்கை அணியுடனான இரண்டாவது 20இருபது போட்டியில் நியுஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.

கண்டி – பல்லேகல மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, 20 ஒவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுக்களை இழந்து, 161 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில், Avishka Fernando 37 ஓட்டங்களையும், Niroshan Dickwella 39 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

இதேவேளை, நியுஸிலாந்து அணிக்காக Seth Rance 3 விக்கெட்டுக்களையும், Tim Southee மற்றும் Scott Kuggeleijn ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில்,162 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி, 19.4 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து, வெற்றியிலக்கை கடந்தது.

மேலும், இலங்கை அணியுடனான 20 இருபது தொடரில் 2.0 என்ற கணக்கில் நியுஸிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here