விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள 45ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான கெரம் போட்டிகளில் மேல் மாகாண அணி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சம்பியனாகத் தெரிவாகின. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மேல் மாகாணத்தின் நிஷாந்த பெர்னாண்டோ வருடத்தின் அதிசிறந்த வீரராகத் தெரிவாகியதுடன், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதே மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டா அதிசிறந்த  வீராங்கனையாகத் தெரிவாகினார். 

இதேநேரம், வட மாகாண அணி ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை இம்முறை தேசிய விளையாட்டு  விழா கெரம் போட்டிகளில் பெற்றுக்கொண்டது. 

பதுளை பொதுநூலக மண்டபத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இம்முறை போட்டிகளின் ஆண்கள் பிரிவில்  கெரம் நடப்புச் சம்பியனான மேல் மாகாணத்தைச் சேர்ந்த நிஷாந்த பெர்னாண்டோ தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.  இதில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அனாஸ் அஹமட் வெள்ளிப் பதக்கத்தையும், வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த  அஞ்சுள குமார வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர்.

இதேநேரம், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் ரொஷிட்டா தங்கப் பதக்கத்தை வெற்றிகொள்ள, சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மதுவன்தி குணதாச வெள்ளிப் பதக்கத்தையும், வட மாகாணத்தைச் சேர்ந்த கே. கேசாஜினி வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

இதுஇவ்வாறிருக்க, ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஷஹீட் ஹில்மி, ஹசித்த அநுருத்த ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றனர். இதில் வடமேல் மாகாணம் (ஜோசப் டிலான், என். விஜேசிங்க) வெள்ளிப் பதக்கத்தையும், மத்திய மாகாணம் (எஸ். சேனாதி, எம், முபீஸ்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here