ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை விளக்கமறியலில் வைக்க சிலாபம் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு அனுமதியின்றி இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி அவரது வீட்டில் இருந்து துப்பாக்கியை மீட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் அதில் அவர் பிணை நிபந்தனையை மீறியதாக மேல் நீதிமன்றிக்கு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அதனடிப்படையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை ஒக்டோபர் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here