இராணுவக் கெடுபிடிகள் அற்ற, தனி மனித சுதந்திரம் அதிகமாக கிடைக்கக்கூடிய வகையிலான ஆட்சியொன்றை ஸ்தாபிக்கும் நோக்கிலேயே தமிழர்கள் தங்களின் வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரெட்னம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கையைப் பொருத்தமட்டில் கடந்த கால ஆட்சியில் இராணுவக் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன.

ஆனால் தற்போதைய ஆட்சியில் தனி மனிதனுக்கு எதாவது நடந்தால் வழக்கு போடக்கூடியளவு ஜனநாயக ஆட்சி உள்ளது.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இராணுவக் கெடுபிடிகள் அற்ற, தனி மனித சுதந்திரம் அதிகமாக கிடைக்கக்கூடிய வகையிலான ஆட்சியொன்றை ஸ்தாபிக்கும் நோக்கிலேயே தமிழர்கள் தங்களின் வாக்குகளை பயன்படுத்த வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here