இந்திய மற்றும் . தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட்  கிரிக்கெட் தொடரில் மூன்று சதங்களுடன் 500 ஓட்டங்களுக்கும் அதிகமாக பெற்றுக்கொண்ட  இந்திய அணி துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா  தரவரிசைப்பட்டடியலில் 10 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தென்னாபிரிக்க அணியுடனான கிரிக்கெட் தொடருக்கு முன்பாக ரோஹித் ஷர்மா  ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் 54 ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தார்.

இதேவேளை ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப்பட்டியலில் விராட் கோஹ்லி 2-ஆவது இடத்திலும், புஜாரா 4-ஆவது இடத்திலும், ரகானே ஐந்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here