ஃபிக் பெருங்கடலில் 500 பெரிய விமானங்களுக்கு ஈடான, சுமார் 1.8 ட்ரில்லியன் ப்ளாஸ்டிக் துகள்கள் மிதந்து வருவதாக ஓஷன் க்ளீனப் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது. மேலும், இதன் எடை 88 ஆயிரம் தொன் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த குப்பைகள் ப்ளாஸ்டிக் திடக் கழிவுகளாக அல்லாமல் சிறிய ப்ளாஸ்டிக் துகள்களால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுவரை எந்த நாட்டின் அரசும் இதை சுத்தம் செய்ய முன் வராத நிலையில், ஓஷன் க்ளீனப் ஃபவுண்டேஷன் சிறிய குழுக்களைக் கொண்டு இதை சுத்தம் செய்ய முயற்சித்து வருகிறது

இந்த குப்பைகள் நதிகளில் கலந்து அதன் வழியாக கடலை வந்தடைகின்றன. பசிஃபிக் பெருங்கடலின் குப்பைகளில் பல்வேறு நாடுகளின் குப்பைகள் இருக்கும். இதில் லாஸ் ஏஞ்சல்ஸின் குப்பைகளையும் காணலாம்.

2015ஆம் ஆண்டு வெளியான சயின்ஸ் அட்வான்ஸஸ் என்னும் சஞ்சகையின் ஆய்வின்படி ஆசியாவிலிருந்துதான் ப்ளாஸ்டிக் குப்பைகள் அதிகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ். வியட்நாம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் கடலில் குப்பைகளை கலக்கும் ஆறு முக்கிய நாடுகள் ஆகும்.

‘தி க்ரேட் பசிஃபிக் கார்பேஜ் பேட்ஜ்’ என்று அழைக்கப்படும் இந்த குப்பைகள் கலிஃபோர்னியா முதல் ஹவாய் தீவுகள் வரை கடலில் மிதக்கின்றன. இந்த குப்பைகள் ஆறு லட்சம் சதுர மைல் அளவுக்கு பரவியிருக்கின்றன. இது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பரப்பளவைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here