அமெரிக்காவின் மினிசோடா மாகாணத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் மினிசோடா மாகாணத்தின் மினிஅப்லிஸ் பகுதியில் 24 அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது.

அதில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கட்டிடத்தின் 14-வது குடியிருப்பில் நேற்று(புதன்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயமடைந்த நால்வர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here