செங்கல்பட்டில் குவியல் குவியலாக வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமந்தபுரம் இந்திரா நகர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வானத்தில் வந்து கொண்டிருந்தபோது பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதன்போது இருவர் காயமடைந்தனர்.

இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த பொலிஸார், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் குண்டு துளைத்தது போன்று காணப்பட்டது.

இதுதொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் எழுந்த சந்தேகத்தின் பேரில் செங்கல்பட்டு மருதம் ஆய்வுக்குழு அதிகாரி ஜெயராமன் தலைமையிலான குழு, ராமகிருஷ்ணன் வீட்டை சோதனையிட்டது.

அப்போது அவரது வீட்டில் வெடித்தும், வெடிக்காத நிலையிலும் குவியல் குவியலாக ரொக்கெட் லோஞ்சர் மற்றும் கையெறி குண்டுகள் சிக்கியுள்ளன.

இந்தநிலையில் இதுதொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here