10 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் முழுமையான சூரிய கிரகணம் ஒன்றை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான இறுதி சூரிய கிரகணம் தென்பட ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, இதுபோன்றதொரு கிரகணம் மீண்டும் 21 வருடங்களின் பின்னரே ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 07.59 இற்கு ஆரம்பித்து பகுதியளவில் காட்சியளிக்கும் இந்த சூரிய கிரகனம் காலை 09.04 இலிருந்து முழுமையாக தென்பட ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலை 10.47 இற்கு சூரிய கிரகணம் முழுமையாக தென்படும்  எனவும் மதியம் 01.35 இற்கு முடிவடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண பிரதேசத்தில் இதனை தெளிவாக அவதானிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்தியாவின் பல இடங்களில் இந்த சூரிய கிரகணம் தென்படும் விதங்கள் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here