இலங்கையை சேர்ந்த மாடல் தர்ஷனுக்கு பிக்பாஸ் மூன்றாவது சீசன் மூலம் தமிழ்நாடு முழுவதும் அதிகம் ரசிகர்கள் கிடைத்தார்கள். அவர் தான் பிக்பாஸ் டைட்டில் வெல்வார் என கூற பலரும் எதிர்பார்த்தார்கள்.

அவரது காதலி சனம் ஷெட்டி தற்போது போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். தன்னை நிச்சயதார்த்தம் செய்து ஏமாற்றிவிட்டதாக அதில் கூறியுள்ளார்.

மேலும் தர்ஷனுக்காக தான் 15 லட்சம் ருபாய் செலவு செய்திருப்பதாக கூறியுள்ளார். “பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அப்ளிகேஷன் அனுப்பியதே நான் தான். விசா உள்ளிட்ட விஷயங்களுக்கு நான் 15 லட்சம் ருபாய் வரை செலவு செய்தேன். தற்போது என்னை பிடிக்கவில்லை என்கிறார். எனக்கு நடிகை வேண்டாம் என கூறுகிறார். அவரது நண்பர்கள் முன்னிலையில் என்னை அவமான படுத்தினார். எனக்கு மற்றவர்களுடன் தவறான தொடர்பு இருக்கிறது என்று கூட பேசுகிறார்.

“இலங்கை சென்று அவரது பெற்றோரை சந்தித்து பேசினேன். அவர்களும் உதவவில்லை. தர்ஷன் என்னை மிரட்டுகிறார். நீ கேஸ் போடுவதென்றால் போட்டுக்கொள். உன்னை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியும் என மிரட்டுகிறார்” என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here