ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் காஜல்அகர்வால், அதையடுத்து , துல்கர்சல்மானுடன் ஒரு படத்தில் நடிப்பவர், அத்துடன் தெலுங்கு, ஆங்கிலத்தில் தயாராகி வரும் மொசகல்லு என்ற படத்திலும் விஷ்ணு மஞ்சுவுடன் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், பல இந்திய பிரபலங்களின் மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியத்தில் காஜல்அகர்வாலின் மெழுகு சிலையும் வைக்கப்பட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. அதையடுத்து தற்போது பிப்ரவரி 5-ந்தேதி அன்று காஜல்அகர்வாலின் மெழுகு சிலை அந்த அருங்காட்சியகத்தில் திறக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அத்தோடு , காஜல்அகர்வாலின் மெழுகு சிலை திறக்கப்படும்போது பார்வையாளர்கள் பார்ப்பதை, விஷ்ணு மஞ்சுவுடன் காஜல் நடித்து வரும் மொசகல்லு படத்திற்காக ஒரு காட்சியை படமாக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் காஜல்அகர்வால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here