ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம்”பாம்பாட்டம் “. வி.சி. வடிவுடையான் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் கதை திகில் கலந்த திரில்லர் வகையைச் சார்ந்தது.

தற்போது பாம்பாட்டம் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. படத்தின் அதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மல்லிகா ஷெரவர் நடிக்க இருக்கிறார் என்பதே அந்த அறிவிப்பு. தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர் மனங்களை வென்றெடுத்த மல்லிகா ஷெரவத் வடமொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here