முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் வெறும் பரிந்துரை மட்டுமே என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நளினி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும்,  நியாயமற்ற முறையில் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் நளினி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே என்றும்,  இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறினார்.

இந்நிலையில், இருதரப்பு வாதப்பிரதிவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் நளினி  சட்டப்பூர்வ காவலில் இருக்கிறாரா? அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். அத்துடன் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here