புல்வாமா தாக்குதலில் பயனடைந்தது யார்? என்பது உள்ளிட்ட மூன்று கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்.

புல்வாமா தாக்குதலின் நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, புல்வாமா தாக்குதலில் நமது சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்த நினைவு தினம் இன்று.

இந்நாளில் நான் கேட்பது,  இந்த தாக்குதலால் அதிகம் பயனடைந்தது யார்?
தாக்குதல் தொடர்பாக விசாரணையில் வெளிவந்த விஷயம் என்ன?, இந்த தாக்குதல் நடப்பதற்கான பாதுகாப்பு குறைபாட்டிற்கு பா.ஜ.க அரசில் பொறுப்பேற்க போவது யார்? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டு 14ஆம் திகதி காஷ்மீர் மாவட்டத்தின் புல்வாமா  என்ற இடத்தில்  பயங்கரவாதிகள் தற்கொலைக்குண்டு தாக்குதலை நடத்தியிருந்தனர். இதில் 40இற்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியா பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் விமானத்தாக்குதலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here