முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் நிறைவு செய்யபப்ட்டுள்ளன.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள புனரவாழ்வு பிரிவிற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ள பகுதியில் நேற்று முன்தினம் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த பகுதியில் நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி தடயவியல் காவல்துறை ஆகியோரின் கணிகாணிப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வுப்பணிகளின் போது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் கிளிநொச்சி பொதுவைத்தியசாலை சட்ட அதிகாரியினால் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here