யானை இன்றேல் போட்டி இல்லை…!

யானை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காவிட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாள்ர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிடாவிட்டால் தானும் நாடாளுமன்ற உறுப்பினர் பியதாசவும் போட்டியிட மாட்டோம் எனவும் இதனை ஏற்கனவே செயற்குழுவிடம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் புதிய சின்னத்தில் போட்டியிட்டுவதில் அர்த்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட மக்கள் யானை சின்னத்திற்கு பழக்கப்பட்டுள்ளதால் குறைந்தபட்சம் நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமாவது யானை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.