ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிங்கமலை வனப்பகுதியில் நேற்று  முற்பகல்  ஏற்பட்ட தீப்பரவில்  5 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி அழிவடைந்துள்ளது..

இதனை அடுத்து, தீயணைப்புப் பணியில், விமானப் படைக்கு சொந்தமான bell  212  ரக ஹெலிகொப்டர் ஈடுபடுத்தப்பட்டதாக  இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல்  தீயிணை  முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக  ஹட்டன் காவல்துறையினர் எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் ஹட்டன் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், அடையாளம் தெரியாத சிலரினால் குறித்த வனப்பகுதியில் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போது நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு இதன்காரணமாக அதிகரிக்க கூடுமெனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here