இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமாகிய நிலையில் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இதேவேளை இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்றைய தினம் ஆரம்பமான நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில் ரிஷாப் பண்ட் 19(53 பந்துகள்)ஓட்டங்களுடனும் , அடுத்து களமிறங்கிய ஆர். அஸ்வின் (0) ஓட்டம் எதுவும் எடுக்காமலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே 46 (138 பந்துகள்) ஓட்டங்களுடனும், இஷாந்த் சர்மா 5(23) ஓட்டங்களுடனும், முகமது சமி 21(20) ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

மேலும் இந்திய அணி 68.1 பந்து பரிமாற்றங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி சார்பில் டாம் லாதம், டாம் புளுண்டேல் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here