தமிழ் சினி உலகின் உச்சம் தொட்ட நடிகர் இளையதளபதி விஜய். இவருக்கென்றே நாளாந்தம் பல ரசிகர்கள் உருவாகிக்கொண்டிருப்பது இவரின் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று சொல்லலாம்.

தற்போது, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தந்தையின் இடத்தை நிரப்புவதற்காக அவருடைய மகனும் வளர்ந்து விட்டாரென்றே சொல்லலாம்.

தற்போது அவருடைய மகனை வைத்து இயக்குவதற்காகவே நிறைய இயக்குனர்கள் வரிசையில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது இயக்குனர்  முருகதாஸும் இணைந்து விட்டார். விஜய்யின் மகனுக்கென்றே ஒரு கதையினை எழுதி விஜயிடம் கூறியிருக்கிறார் ஆனால் விஜய் தன்னுடைய மகன் விடயத்தில் தெளிவாக இருக்கிறார் என்றே கூறலாம்.

தன்னுடைய மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தால் தானே சினித்துறையில் புகுத்துவேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here