நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலாவதாக நடந்த டி-20 தொடரை முழுமையாக கைப்பற்றி நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 21ம் திகதி வெலிங்டன் மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ஓட்டங்களுக்குள் சுருண்ட நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ஓட்டங்கள் எடுத்தது.183 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 9 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு இது முதல் தோல்வியாகும். போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணித்தலைவர் கோஹ்லி, ” இந்த போட்டியில் நாங்கள் போதுமானளவு போட்டித்தன்மையை வெளிப்படுத்தவில்லை. கடந்த காலங்களில், நாங்கள் தோல்வியுற்ற போதிலும் நன்றாக விளையாடியுள்ளோம். ஆனால் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மிக மோசமான துடுப்பாட்டதை மேற்கொண்டுள்ளோம் என்று நான் நினைக்கிறேன் ” எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here