நாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையிலும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்களை மன்னாரிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றதாக வெளியான தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இயங்காமல் இருக்கும் மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள ‘காமன்ஸ்’ கட்டிட தொகுதியில் குறித்த நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்தி வைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மக்கள் மத்தியில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இதனால் மன்னார் மக்கள் அச்சசமடைந்த நிலையில் உள்ளனர். குறித்த ‘காமன்ஸ்’ அமைந்துள்ள பகுதியில் மக்கள் அதிகம் நெருக்கமாக வாழ்வதாகவும் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட நபர்களை கொண்டு வந்து தனிமைப்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here