இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

இத்திரைப்படத்திற்கு பிறகு விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்றே எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியவரும், தற்போது விக்ரமின் கோப்ரா படத்தை இயக்குபவருமான அஜய் ஞானமுத்து இயக்குவதாக சில நாட்களாக செய்திகள் வந்தன.

இதுபற்றி அஜய் ஞானமுத்து டுவிட்டரில், ‛‛இது யார் பார்த்த வேலைன்னு தெரியல, விஜய் 65வது படத்தை நான் இயக்கவில்லை என கூறியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here