கிழக்கு மாகாண மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான கோவிட்-19 விசேட சிகிச்சை நிலையம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கோவிட்-19 விசேட செயலணி அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதில், தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் நபர்கள் முதலில் 0766 992 261 என்கின்ற விசேட தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு முதற்கட்ட வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்

இவ்வாறு உங்களிடம் இருந்து சில முக்கிய தகவல்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட விசேட நிபுணர்கள் குழுவுடன் ஆலோசிக்கப்பட்ட பின்னர்  பொருத்தமான சிகிச்சை முறை பற்றி உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.

அதன்பிரகாரம், வீட்டுத் தனிமைப்படுத்தலில் உங்களை வைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படின் பொதுச் சுகாதாரத் துறையினருக்கு அறிவிக்கப்பட்டு ஆவன செய்யப்படும். வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டியேற்படின் எவ்வாறு அனுமதிப்பது என்பது தொடர்பாக நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள்.

நாங்கள் உங்களுக்காக விழித்திருக்கிறோம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே இருங்கள். நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நாம் எல்லோரும் இணைந்து நமது நாட்டையே காப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here