யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் யாழ்.தாவடி பகுதியில் உள்ள வீடு மற்றும் அவர் சென்றுவந்த இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நபர் யாழ்.செம்மணி தேவாலயத்தில் விசேட ஆராதனையில் கலந்துகொள்வதற்காக வந்த சுவிஸ் நாட்டு போதகர் ஒருவருடன் பழகிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

கிருமி தொற்றை தடுக்கும் கவச ஆடைகளுடன் பொலிஸாா், இராணுவம் ஆகியவற்றின் பாதுகாப்புடன் குறித்த நபருடைய வீடு, அருகில் உள்ள கோவில்கள், மற்றும் வா்த்தக நிலையங்கள், அயலில் உள்ள வீடுகள் போன்றவற்றில் இந்த தொற்று நீக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here