யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனம்காணப்பட்ட நிலையில் வடமாகாணத்திற்கான ஊரடங்கு காலம் நாளை(செவ்வாய் கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அத்துடன், நேற்று மாலை 6 மணிக்கு பின்னர் ஓமந்தை, மற்றும் கனகராயன்குளம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,  ஏ  9 வீதி மூடப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தற்காலிக அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மாத்திரம் குறித்த வீதியால் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதுடன் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here