மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி யாழ். மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, 8 அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் சுனில் ரத்நாயக்கவுக்கு மரண தண்டனை விதித்தது.

இந்நிலையில் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க இன்று (வியாழக்கிழமை) வீடு திரும்பியுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here