கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உலகே ஸ்தம்பிதமாகியுள்ள நிலையில் இலங்கையிலும் குறித்த வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இலங்கை அரசாங்கம் ஊடரங்கு சட்டத்தினை  அமுல்படுத்தியுள்ளது.

இதனால் அன்றாடம் வருமானமாக ஈட்டும் குடும்பங்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் அவர்களுக்கான உலர் உணவுப்பொதிகளை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு தொடர்ந்து விநியோகித்து வருகின்றது.

அந்த வகையில் நேற்று காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட 06.00 மணி தொடக்கம் 02.00 மணிவரையான காலப்பகுதிக்குள் எருவில், செட்டிபாளையம், ஆரையம்பதி, வவுணதீவு, மணிபுரம், மங்கிக்கட்டு, கொடுவாமடு மாவடிவேம்பு, சித்தாண்டி சவுக்கடி,  சத்துருக்கொண்டான், கொக்குவில் ஆகிய பன்னிரண்டு கிராமங்களில் உள்ள 1000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு அவ் அமைப்பின் தொண்டர்களினால்  உலர் உணவுப்பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here