கனடா கரம்பொன் பவுண்டேசனால் உதவிகள் வழங்கி வைப்பு!!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் உள்ள காரணத்தால் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் கனடா கரம்பொன் பவுண்டேசன் இலங்கை இணைப்பாளர் திரு சீ. மார்க்கண்டு அவர்களின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பத்தினாயார்மகிழங்குளம், ஓயார்சின்னக்குளம், திருநாவற்குளம் ஆகிய கிராமங்களில் வறுமைகோட்டிற்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இவ் நிவாரண பணியில் வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், தாண்டிக்குளம் கிராம சேவையாளர், பத்தினியார் மகிழங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் சோதிநாதன், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்,

இதுபோன்ற உதவித்திட்டங்களை தொடர்ச்சியாக மக்களுக்கு வழங்குவதற்கு கனடா கரம்பொன் பவுண்டேசன் நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக இலங்கை இணைப்பாளர் மார்க்கண்டு எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.