கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்த யுவதியைக் காப்பாற்ற சென்ற இளைஞரைக் காணவில்லை!

தலவாக்கலை – மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்த யுவதியைக் காப்பாற்றிய இளைஞர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.

காணமற்போன இளைஞரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மீட்கப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை தோட்டத்தை சேர்ந்த 22 வயதான யுவதி இன்று முற்பகல் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.

இவரைக் காப்பாற்ற அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் முயற்சித்துள்ளார்.

இதன் பின்னர், குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் யுவதியைக் காப்பாற்றியுள்ளனர்.

எனினும், யுவதியைக் காப்பாற்ற சென்ற தலவாக்கலை – பாமஸ்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.