நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 1028 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 1028 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு மேலும் ஒரு நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 435 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 112 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று Covid – 19 தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைந்தனர்.

அதற்கமைய தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது.