மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர்.

Covid – 19 தொற்றுக்குள்ளாகியோரில் மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் Covid – 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,028 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 435 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் கண்காணிக்கும் நிலையத்திலிருந்து 20 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

40 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,085 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.