ஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்கம்…!

உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதால், 2ஆவது அலை தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் ஒரு இலட்சத்து 1,400-க்கும் மேற்பட்டோருக்கு தாக்கியுள்ளமை பதிவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இது என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51 இலட்சத்து 94 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இந்த தொற்று காரணமாக இதுவரையில் 3 இலட்சத்து 34 ஆயிரத்து 621 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 20 இலட்சத்து 81 ஆயிரத்து 504 பேர் குணமடைந்துள்ளனர்.