கொரோனாவின் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடு ரஷ்யா…!!!

கொரோனா வைரஸ் தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் ரஷ்யாவுக்கு, அமெரிக்கா செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) நன்கொடையாக அளித்துள்ளது.

நன்கொடை அளித்த அமெரிக்க வெண்டிலேட்டர்களைக் கொண்ட ஒரு அமெரிக்க இராணுவ விமானம் மாஸ்கோவில் தரையிறங்கியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெண்டிலேட்டர்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படவுள்ளது.

இதுதொடர்பாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யாவிற்கு மொத்தமாக 200 வெண்டிலேட்டர்கள் தேவைப்படும். அமெரிக்க தயாரித்ததன் வென்டிலேட்டர்களை மனிதாபிமானமாக நன்கொடையளித்ததன் முதல் பகுதி இது. 5.6 மில்லியன் டொலர் மதிப்புடையது’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா 50 வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளித்துள்ளது.

தூதரக செய்தித் தொடர்பாளர் ரெபேக்கா ரோஸ், அமெரிக்க விமானப்படை சரக்கு விமானம் ரஷ்ய தலைநகரிலுள்ள வுனுகோவோ விமான நிலையத்திற்கு வந்த பின்னர் இணையத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

‘நெருக்கடி காலங்களில், அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து உயிரைக் காப்பாற்ற வேண்டும்’ என்று அவர் பதிவேற்றிய புகைப்படத்திற்கு மேல் குறிப்பிட்டுள்ளார்.