டபுள் ஆக்‌ஷன் சிவகார்த்திகேயனுக்கு கைக்கொடுக்குமா பார்ப்போம்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது டாக்டர் படம் உருவாகி வருகிறது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படமும் வரவுள்ளது. இப்படம் ஏலியன் கதையம்சம் கொண்டது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அட்லீயின் உதவி இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்டு ஓகே சொல்லியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் டபுள் ஆக்‌ஷனில் படம் முழுக்க முதன் முறையாக நடிக்கவுள்ளார், பலருக்கும் கைக்கொடுத்த டபுள் ஆக்‌ஷன் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் கைக்கொடுக்குமா பார்ப்போம்.