தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…!

மட்டக்களப்பு நெடுஞ்சேனை வாதக்கல்மடுவைச் சேர்ந்த கந்தசாமி கோமிதா என்னும் இளம் பெண் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் தற்கொலையில் பல சந்தேகங்கள் உள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் காதலித்து வந்த நிலையில்,
சம்பந்தப்பட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட கொலையில் சந்தேகம் இருப்பதாகவும் இந்த இளம்பெண் உயரமான மரத்துக்கும் எப்படி ஏறினார் என்ற கேள்விகளை பிரதேசவாசிகள் எழுப்பியுள்ளனர்.