பொசன் கொண்டாட்டங்களை மேற்கொள்ள அனுமதி…!

சுகாதார அமைச்சு விடுத்துள்ள பாதுகாப்பு முறைகளுக்கு அமைய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களின் பங்களிப்புடன் பொசன் பண்டிகைகளை கொண்டாட முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இன்னும் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்றமையால் குறித்த கொண்டாட்டங்கள் தொடர்பில் பிரச்சாரங்களை மேற்கொள்ளுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.