வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு சீனாவில் தடை…!

வனவிலங்கு வேட்டை மற்றும் வனவிலங்கு இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் உள்ள இறைச்சி வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்தே பரவியதாக நம்பப்படுகிறது.
வைரஸ் பரவலுடன் சீனாவில் பல மாநிலங்களில் வனவிலங்கு இறைச்சி வர்த்தகம் தடை செய்யப்பட்டதுடன் விலங்கு வேட்டை, இறைச்சிக்காக விலங்குகளை வளர்த்தல் மற்றும் வாகனங்களில் ஏற்றிச் செல்லலும் தடை செய்யப்பட்டிருந்ததது.
இந்த நிலையிலேயே வனவிலங்கு வேட்டை மற்றும் வனவிலங்கு இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்படவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.