ஆரோன் பின்ச்சின் 3 திட்டங்கள்!!!!!!!!!

2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்காக தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை அவுஸ்ரேலிய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணித் தலைவர் ஆரோன் பின்ச் ஆரம்பித்துள்ளார்.

இதன்படி இளம் வீரர்களுடன் உலக கிண்ணத்தை வெற்றிக் கொள்ளும் செயற்பாடுகளை அவர் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வீரர்களின் துடுப்பாட்டம்,களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு முறைமை என்பன தொடர்பில் அவர் அதிக கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆரோன் பின்ச்சின் திட்டங்களும் அந்த போட்டியின் போது கவனம் செலுத்தப்படுமென அவுஸ்ரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.