பாகிஸ்தான் கிரிக்கெட் சபை-6 வீரர்களிற்கு தொற்று இல்லை!!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 10 வீரர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியதாக முன்னர் கண்டறியப்பட்ட போதும், தற்போது அவர்களில் 6 வீரர்களிற்கு தொற்று இல்லையென்பது உறுதியானதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இன்று நடத்தப்பட்ட மீள் பரிசோதனையில் 6 வீரர்களிற்கு தொற்று இல்லையென்பது உறுதியானது.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 10 வீரர்களும் இன்று மீளவும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில், ஃபக்கர் ஜமான், முகமட் ஹஸ்னைன், முகமட் ஹபீஸ், முகமட் ரிஸ்வான், சதாப் கான் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோருக்கு தொற்று இல்லையென்பது உறுதியானதும் குறிப்பிடத்தக்கது.