இணையம் மூலமாக பயிற்சிகளை வழங்க தோனி முயற்ச்சி

கொவிட்-19 காரணமாக இந்தியா முடக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் உள்ள இளம் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி இணையம் ஊடாக பயிற்சிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பயிற்சி மையம் ஒன்று நிறுவப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த பயிற்சி மையத்தின் இயக்குனராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரியல் கல்லினன் செயற்படவுள்ளார்.
இதற்காக விளையாட்டு நிறுவனம் ஒன்று மகேந்திர சிங் தோனியுடன் கைகோர்த்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த இணைய மூலமான பயிற்சி நடவடிக்கை எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.