குழந்தைகளுக்கு பிடித்த பிஸ்தா ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்

பிஸ்தா – 50 கிராம் (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்)
விப்பிங் க்ரீம் – 200 மிலி
மில்க் மெயிட் – 200 மிலி
பிஸ்தா எசன்ஸ் – ½ டீஸ்பூன்
பச்சை ஃபுட் கலர் – சில துளிகள்

 

செய்முறை

முதலில் விப்பிங் க்ரீமை எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க நன்றாக கெட்டியாக வரும்வரை அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில், மில்க்மெய்ட், பிஸ்தா எசன்ஸ், பச்சை ஃபுட்கலர் ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும். கடைசியாக அதில் அரைத்த பிஸ்தாவை சேர்த்து நன்கு கலந்து ஃப்ரீசர் பாக்ஸில் போட்டு பத்து மணிநேரம் வரை ஃபிரிட்ஜில், ஃப்ரீசரில் வைத்து எடுத–்து, அதன்மேல் பொடியாக நறுக்கிய பிஸ்தாவை அலங்கரித்து பின்னர் பரிமாறவும்.