சத்யா பட கமல் போல் விஜய் சேதுபதி- வைரல்!!!!!!!!!!!!!

சத்யா கமல் கெட்டப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் போட்டோஷுட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சத்யா கமல் கெட்டப்பில் விஜய் சேதுபதி…. வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் சேதுபதி, கமல்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் மாஸ்டர், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கிலும் நடிக்கிறார். மேலும் தேவர்மகன் படத்தின் 2-ம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சத்யா பட கமல் போல் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சத்யா பட கமல் கெட்டப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், விஜய் சேதுபதியை வைத்து சத்யா இரண்டாம் பாகமே எடுக்கலாம் போல என கமெண்ட் செய்கின்றனர்.