தமிழகத்திற்குள் இயங்கி வந்த விஷேட ரயில்கள் இரத்து…!!!

தமிழகத்திற்குள் இயக்கப்பட்டு வந்த ஏழு சிறப்பு ரயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிலையம் தகவல் அறிவித்துள்ளது.

இதன்படி கோவை, மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி, திருச்சி – செங்கல்பட்டு, திருச்சி – செங்கல்பட்டு மெயின் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த ரயில்பணிகள் எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதிவரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளின் பதிவு கட்டணம் திருப்பி செலுத்தப்படவுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.