அரசு உத்தரவை செயல்படுத்தும் நோக்குடன் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்டாக் …!!!

டிக்டாக் இந்தியா நிறுவனம் அரசு உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பித்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தடை உத்தரவு வெளியான 24 மணி நேரத்திற்குள் டிக்டாக் இந்தியா நிறுவனம், ‘மத்திய அரசு பிறப்பிக்கும் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு சடத்திட்டங்களை பின்பற்றுவதாக தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்திய பயனர் விவரங்களை வேறு எந்த அரசாங்கத்துடனும் பகிர்ந்து கொள்ளவில்லை’ என தகவல் தெரிவித்துள்ளது.