இன்று முதல் விநியோகம் – அஞ்சல் மூலம் வாக்குச்சீட்டுக்கள்

பொது தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் அஞ்சல்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்த முறை தேர்தல் குறித்த அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 7 லட்சத்து 5 ஆயிரத்து 85 பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.
இதற்கமைய அடுத்த மாதம் 14,15,16,17 மற்றும் 20,21 ஆம் ஆகிய திகதிகளில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று ஒன்றுக் கூடவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பலச்சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இந்தநிலையில் இன்றைய பேச்சுவார்தையின் போது, தேர்தலை நடத்துவது தொடர்பான நிபந்தனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.